அலாரிப்பு
அலாரிப்பு என்ற சொல் தமிழில் மலர்வது என்று பொருள்படும். இவ்வுருப்படி நடனமாடுபவர் தன் உடலை மலராக நினைத்து அதனைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. உருப்படிகளின் வரிசையில் இது ஆரம்ப நிகழ்ச்சியாக விளங்கும். தலைக்கு மேலிருந்து அஞ்சலி ஹஸ்தத்தில் இருந்து ஆரம்பமாகும். குரு, தெய்வம், சபையினர் என்போருக்கு வந்தனம் செலுத்தும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்துள்ளது. இது எவ்வித பாடல்களோ, அபிநயங்களோ இன்றி ஆடப்படும் உருப்படியாகும். இதில் "தாம்திதா தெய்ததெய்" எனும் சொற்கட்டு விளம்ப, மத்யம, துரித காலங்களில் இடம்பெறுகிறது. இவ்வுருப்படி "நாட்டை" இராகத்தில் பாடப்படுகிறது.
நாட்டியத்திற்குரிய உறுப்புகளில் மிக முக்கியமான கண், முகம், கழுத்து ஆகியவற்றின் அசைவுகளும், கை, கால்களின் அசைவுகளும் அலாரிப்பில் இடம்பெறுகின்றன. இவ்வுருப்படி ஆரம்பிக்கும்போது கால்கள் சமபாதத்திலும், திருஷ்டி சாமத்திலும், கைகள் நாட்டியாரம்பத்திலும் இருக்கும். கண், கழுத்து, தோள் ஆகியவற்றின் அசைவுகளுடன் படிப்படியாக ஆரம்பித்து கைகள், கால்களின் அசைவுகளுடன் தொடர்ந்து அரைமண்டி, முழுமண்டி நிலைகளில் அமர்ந்து இதனைச்செய்வர். நர்த்தகி தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே இதன் குறிக்கோளாகும்.
கழுத்தின் அசைவில் கழுத்து மட்டுமே குறுக்காக அசைய வேண்டும்.இதனை "அட்டமி" என்று அளப்பார். அதனை "சுந்தரி" என்று சமஸ்கிருதத்தில் கூறுவார். அட்டமி ஆட்டத்திற்கு களை கொடுக்கும் தன்மையானது. அலாரிப்பில் பலவித மண்டலபேதங்களும், முத்திரைகளும், சிரோபேதங்களும், திருஷ்டிபேதங்களும் க்ரீவாபேதங்களும் இடம்பெறுகின்றன.
மண்டலங்களில் ஸ்தானம், ஆயத்தம், ப்றேங்கனம், பார்வசூசி, ஸ்வஸ்திகம் போன்ற பேதங்கள் இடம்பெறுகின்றன. பதாகம், திரிபதாகம், அலபத்மம், கடஹாமுகம், குழிபதாகம் போன்ற முத்திரைகளும், சமம், உத்வாஹிதம், அதோமுகம், கம்பிதம் போன்ற சிரோ பேதங்களையும் , சமம், சாசி, ப்ரலோகிதம், உள்லோகிதம் போன்ற திருஷ்டிபேதங்களையும், க்ரீவா பேதத்தில் "சுந்தரி" என்பதையும் கொண்டதாக அமைகின்றது. அலாரிப்பு ஒரு விறு தீர்மானத்துடன் முடிவடைகின்றது. இத்தீர்மானம் அநேகமாக துரித காலத்தில் அமைந்திருக்கும். இது ஐந்து ஜாதிகளிலும் அமைக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் திஸ்ரம், மிஸ்ரம், இரண்டுமே வழக்கத்தில் உள்ளன. இந்நிகழ்ச்சி மூன்று நிமிடங்களுக்குரியதாக அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.