தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

செவ்வாய், 29 அக்டோபர், 2013

சப்தம்


நிருத்தம்

நிருத்தம் என்பது பரதநாட்டியத்தில் சுத்த நடனம். இது உடல் அழகையும்[1], உடலின் அழகிய அசைவுகளையும், தாளத்தின் மிக நுணுக்கமான அளவைகளையும், கைகள், விரல்களின் அழகான முத்திரைகளையும், பாதஜால வித்தைகளையும் இசை, அதன் தாள மெல்லின வல்லினங்களையும் உருவகப்படுத்தும் ஒரு கலையாகும்.நிருத்தத்தில் உடலின் எல்லாப்பாகங்களும் அதாவது தலையிலிருந்து பாதம் வரை எல்லா உறுப்புக்களும் அழகுற இயங்குகின்றன. இக்கலை நாட்டியத்தின் ஒரு பெரும் பகுதியாக அமைந்துள்ளது. பரதநாட்டியத்தில் நிருத்தம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். போர் புரிதல், தேரோட்டம் என்பன நிருத்தத்திலேயே அவதரிக்கப்பட்டன. நிருத்தம் பிரத்தியேக கருத்து ஒன்றும் வெளிப்படுத்தப்படாமல், கலாரசனைக்காக ஆடப்படுவதால் மிகவும் சுலபமாக எல்லோராலும் ரசிக்கப்படக் கூடியது. இந்நடனம் காண்பவர் மனதை கவர்வது மட்டுமல்லாது, நடனம் ஆடுவோரையும் மிக மென்மையான நிலைக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. நடனத்தில் சிருங்கார ரசம் நிறைந்த காட்சிகளில் நிருத்தம் இன்றியமையாத ஒரு அம்சமாகும். நாட்டியத்தின் ஆரம்பத்தில் ஆராதனை நிகழ்வதை பூர்வாங்கம் என்பர். இதன் விசேட நிகழ்ச்சி நிருத்தமாகும்.

திங்கள், 28 அக்டோபர், 2013

அலாரிப்பு

பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவு அலாரிப்பு (alarippu) எனப்படுகிறது. கடவுள், குரு, மற்றும் காண்போரையும் வணங்கும் பொருட்டு இதைச் செய்கின்றனர்.[1]. நட்டுவனார் துணை கொண்டு இவ்வசைவு செய்யப்படும். நடனக் கலைஞரின் உடலை இலகுவாக்க உதவும். அலாரிப்பு என்றால் உடலும் மனமும் மலர்தல் என்று பொருள். இவ்வசைவு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தொடரும்.

நிருத்தியம்

நிருத்தியம் என்பது நிருத்த முறையோடு கூடிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் ஆடல் முறையாகும். பாட்டின் பொருளுக்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு, அதன் கருத்துக்களை விளக்கும் அபிநயக்கைகளை இயக்கியவண்ணம், பாதங்களையும் பாட்டிற்கேற்ப இயங்கவைப்பது நிருத்திய இயல்பாகும். கண்களாலும் முகத்தாலும் கை முத்திரைகளாலும் கருத்துகளையும் உள்ளத்து உணர்வுகளையும் வெளிக்காட்டும் ஆடல் முறை. இதில் பாடல் சிறப்பிடம் பெறும். பரதநாட்டியத்தில் சப்தம், பதவர்ணம், வர்ணம் ஆகிய நிகழ்ச்சிகள் நிருத்திய வகையைச் சார்ந்தன

நாட்டியம்

நாட்டியம் என்பது பரதநாட்டியத்தில் கதையை அடிப்படையாகக் கொண்டு அக்கதைக் கதாப்பாத்திரங்களை தனித்தனியாக சித்தரித்து ஆடும் ஆடல் முறை. கதையின் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அபிநயித்து ஆடப்பெறும்.ஒருவரே வெவ்வேறு கதாபாத்திரங்களாக அபிநயிப்பர். கீதம் வாத்தியம் நடனம் இவைமூன்றும் இணைந்து கதையை மையமாகக் கொண்டு, பாத்திரங்களின் தன்மைக்கேற்ப நவரச உணர்வுகளை வெளிப்படுத்தும் . பலர் சேர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்தரித்தும் ஆடுவர். இந்த வகையில் பெரும்பாலும் புராணக்கதைகளும்,இதிகாசங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. குறவஞ்சி நாட்டியம், நாட்டிய நாடகங்கள் ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தன.

பரதநாட்டிய உடை




ஞாயிறு, 27 அக்டோபர், 2013