நிருத்தம் என்பது பரதநாட்டியத்தில் சுத்த நடனம். இது உடல் அழகையும்[1], உடலின் அழகிய அசைவுகளையும், தாளத்தின் மிக நுணுக்கமான அளவைகளையும், கைகள், விரல்களின் அழகான முத்திரைகளையும், பாதஜால வித்தைகளையும் இசை, அதன் தாள மெல்லின வல்லினங்களையும் உருவகப்படுத்தும் ஒரு கலையாகும்.நிருத்தத்தில் உடலின் எல்லாப்பாகங்களும் அதாவது தலையிலிருந்து பாதம் வரை எல்லா உறுப்புக்களும் அழகுற இயங்குகின்றன. இக்கலை நாட்டியத்தின் ஒரு பெரும் பகுதியாக அமைந்துள்ளது. பரதநாட்டியத்தில் நிருத்தம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். போர் புரிதல், தேரோட்டம் என்பன நிருத்தத்திலேயே அவதரிக்கப்பட்டன. நிருத்தம் பிரத்தியேக கருத்து ஒன்றும் வெளிப்படுத்தப்படாமல், கலாரசனைக்காக ஆடப்படுவதால் மிகவும் சுலபமாக எல்லோராலும் ரசிக்கப்படக் கூடியது. இந்நடனம் காண்பவர் மனதை கவர்வது மட்டுமல்லாது, நடனம் ஆடுவோரையும் மிக மென்மையான நிலைக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. நடனத்தில் சிருங்கார ரசம் நிறைந்த காட்சிகளில் நிருத்தம் இன்றியமையாத ஒரு அம்சமாகும். நாட்டியத்தின் ஆரம்பத்தில் ஆராதனை நிகழ்வதை பூர்வாங்கம் என்பர். இதன் விசேட நிகழ்ச்சி நிருத்தமாகும்.
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம்
உ தாரணம்
http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk
kalaikalakam-tamil blogspot.in
kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது
அன்புடன்
கலைக்கழகங்களின் நிர்வாகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.